40 கத்திகளை விழுங்கிய பஞ்சாப் போலீஸ்காரர்

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (16:42 IST)
பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் 40 கத்திகளை விழுங்கியுள்ளார். அந்த கத்திகள் அவரது வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினார்கள்.


 

 
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தரன்தரன் மவட்டத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் கர்ஜித் சிங்(40) வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் ஆவரது வயிற்றில் இருந்து 40 கத்திகள் அகற்றப்பட்டது. 
 
கர்ஜித சிங் கடந்த ஓராண்டு காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு, கத்திகளை தொடர்ந்து விழுங்கி வந்துள்ளார். அதில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் உடல் மெலிந்து கொண்டு இருந்துள்ளது.
 
இந்நிலையில் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். வயிற்றில் கத்திகள் இருப்பதையும், அந்த கத்திகள் வயிறு, ஈரல், போன்றவற்றை கிழித்து பாதிப்பை ஏற்படுத்து இருந்தது தெரியவந்தது.
 
அதன்பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, கத்திகளை அகற்றினர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்