11-ம், 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்: அமைச்சரவை ஒப்புதல்

வியாழன், 19 செப்டம்பர் 2019 (20:17 IST)
அரசு பள்ளியில் படிக்கும் 11-ம்வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் இது தமிழகத்தில் அல்ல, பஞ்சாப் மாநிலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது
 
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் மொபைல் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது
 
இன்று பஞ்சாப் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தலைமையில் நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் நடப்பு நிதியாண்டில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி வரும் டிசம்பரில் முதற்கட்டமாக, இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில்  11, 12 ஆம் வகுப்புகளில்  படிக்கும் ஸ்மார்ட் போன் இல்லாத, மாணவ,மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்