இந்தியாவை சூழும் போர் மேகம்: பள்ளிகளை மூட அரசு உத்தரவு!
வியாழன், 29 செப்டம்பர் 2016 (16:08 IST)
காஷ்மீர் மாநிலத்தில் உரியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்று இரவு பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நுழைந்து விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்களை பாதுகாக்க இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயங்காது என எச்சரிக்கை விடுத்தார். இதனால் இரு நாட்டு எல்லை பகுதியிலும் போர் சூழல் உருவாகியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது மத்திய அரசு. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
எல்லையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.