கைதிகள் யோகா செய்தால் தண்டணை காலம் குறைப்பு: மகாராஸ்டிரா அரசு

வெள்ளி, 24 ஜூன் 2016 (00:20 IST)
நாக்பூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் யோகா தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு 3 மாதங்கள் தண்டனை காலம் குறைக்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.


 

 
மத்திய அரசு சார்பில் யோகா நாடு முழுவதும் பிரதமர் மோடி மூலம் பிரபலம் அடைந்து வரும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச யோகா தினத்தன்று அரசு சார்பில் மக்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் யோகா செய்யும் விழா வெற்றிகரமாக நடைப்பெற்றது.
 
இந்நிலையில் மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் யோகா தேர்வில் வெற்றி பெற்றால் அவர்களது தண்டணை காலம் 3 மாதங்கள் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
 
இதன் மூலம் சிறைவாசிகள் மனதளவில் கட்டுப்பாடோடு வெளியேறுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் திருந்தவும், அவர்களை நன்னெறி படுத்தும் இடமான சிறையில் இதுபோன்ற திட்டம் கட்டாயம் சிறையின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இருக்கும்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்