500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கக் கூட போதுமான 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் அல்லல் படுகின்றனர். ஏ.டி.எம்.களில் தற்போது ரூ.4,500 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டும் எந்த பலனும் இல்லை. காரணம் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் இருப்பே இல்லை. ரிசர்வ் வங்கியும் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு புதிய ரூபாய் தாள்களை அச்சடித்துவருகிறது. இதில் புதிய தாள்களில் சில் நேரங்களில் அச்சுப்பிழையுடன் வெளிவருகிறது.