இதற்கு இம்ரான் கானுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் – மோடி பேச்சு

சனி, 9 நவம்பர் 2019 (12:20 IST)
சீக்கியர்கள் தங்கள் புனித தலத்திற்கு சென்று வழிபட பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீக்கியர்களின் கடவுளான குருநானக்கின் 550வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் குருநானக்கின் புனித தலமாக அறியப்படும் கர்தார்பூருக்கு சீக்கியர்கள் செல்வது வழக்கம். இந்த கர்தார்பூர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் 4 கி.மீ தொலைவில் உள்ளது.

சீக்கியர்கள் தங்கள் புனித தலத்திற்கு சென்று வழிபட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விசா இல்லாத அனுமதி அளித்துள்ளார். இன்று நடைபெற்ற கர்தார்பூர் செல்லும் விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி குருத்வாராவில் வழிபாடு செய்தார். பின்னர் மக்களிடம் பேசிய அவர் “இந்திய மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து பாகிஸ்தானுக்குள் அனுமதி அளித்ததற்கு பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி” என கூறியுள்ளார்.

மேலும் 550வது குருநானக் விழாவை சிறப்பிக்கும் வகையில் புதிய நாணயம் ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்