முஸ்லிம்களுக்கான தொழுகை நேரம் மாற்றம்: காரணம் உள்ளே...

புதன், 28 பிப்ரவரி 2018 (15:52 IST)
வண்ணங்களின் விழாவான ஹோலி பண்டிகை நாளை முதல் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை நாளை மாலை முதல் வெள்ளிக்கிழமை வரை கொண்டாடப்படுகிறது. 
 
இந்நிலையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ நகரில் உள்ள மசூதிகளில் தொழுகை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாநில முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. 
 
இது குறித்து கூறப்பட்டதாவது, ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்தால், அந்த நேரத்தில் மற்ற மக்களுக்கும் எந்த விதத்திலும் இடையூறு வரக்கூடாது என்பதற்காக உத்தரப் பிரசேதத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை தொழுகையை 12.20 மணிக்கு துவங்குவதற்கு பதிலாக 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக துவங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், இந்த முயற்சி நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் என எதிர்ப்பார்க்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்