2005-2015 இடைப்பட்ட காலத்தில் பீகார் மாநிலம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், போதுமான வளர்ச்சி பெறவில்லை என குற்றம் சாட்டும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், வருகிற 20 ஆம் தேதி இது குறித்து பரப்புரையை மேற்கொள்ளவுள்ளதாகவும், 100 நாட்களில் 1 கோடி பேரை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரஷாந்த் கிஷோர், “நிதிஷ் குமார், காந்தியின் கொள்கைகளை கைவிடக் கூடாது என பேசி வந்தார். ஆனால் தற்போது பாஜகவுடனான கூட்டணிக்காக கோட்சே குறித்து மென்மையான போக்கை கடைபிடிக்க வருகிறார்” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.