பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்!

சனி, 30 ஜூன் 2018 (13:17 IST)
இந்தியாவில் முதல் பெண் பார்வையற்ற ஐஏஎஸ் அதிகாரி பிரன்ஞால் பாடில் கேரளாவில் துணை கலெக்டராக பதவியேற்றுள்ளார்.
மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இன்ஜினியர் என்பி பாட்டீல்- ஜோதி தம்பதியரின் மகள் பிராஞ்சலி பாட்டீல். இவர் 2வயதில் கண் பார்வையை இழந்தார். ஆனாலும் தன்நம்பிக்கையை இழக்காத அவர் கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையை சிறுவயது முதலே தனது மனதில் விதைத்தார். மும்பை கல்லூரியில் பட்டம், டெல்லியில் எம்பில் மற்றும் பிஎச்டி முடித்தார்.
 
இதனையடுத்து, ஓராண்டு காலமாக கடுமையாக உழைத்து தொடுதிரை கம்ப்யூட்டர் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானார். இதன்பின்னர் 2014ம் ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வு எழுதிய அவருக்கு ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், தனது ஐஏஎஸ் லட்சியத்திற்காக அந்த பணி வாய்ப்பை மறுத்தார். இதையடுத்து, 2016ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஸ் தேர்வில் தேர்ச்சியடைந்தார்.
 
இந்நிலையில், இவர் கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் மாவட்டத்தில் துணை ஜஏஎஸ் அதிகாரியாக பதவியேற்றுள்ளார். கண் பார்வையற்ற பெண் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்பது இந்தியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்