நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்க கூடாது என்று அவருடைய மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியிருந்தார். ஆனால் தற்போது அவரே பா.ஜ.வில் இணைய போவதாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஷர்மிஸ்தா முகர்ஜி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் பாஜக வேட்பாளராக களமிறங்கவிருப்பதாகவும் கூறப்படுவதால் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்து மாநில தேர்தலில் வெற்றி, பிரியங்காவின் அரசியல் வருகை என காங்கிரஸ் கட்சி தற்போது இந்திய அளவில் பலமாகி கொண்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் மகளே பாஜக சார்பில் போட்டியிடுவது காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது.