பட்ஜெட் 2017-18 : தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

புதன், 1 பிப்ரவரி 2017 (16:26 IST)
2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை மற்றும் ரயில்வே பட்ஜெட் இரண்டையும் தாக்கல் செய்தார்.


 

 
இந்த ஆண்டும், தனிநபர் வருமான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் வரை பெறுபவர்களுக்கான வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், 5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 10 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.  இது தவிர, பணப்பரிமாற்ற கட்டுப்பாடு, பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கிடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
 
இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனார். 
 
பிரதமர் மோடி : இது ஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் பட்ஜெட். ஊழல் மற்றும் கருப்பு பணத்தை இந்தியாவிலிருந்து முழுவதும் அகற்ற இந்த பட்ஜெட் வழிவகை செய்கிறது.
 
ராகுல் காந்தி : இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லை. ரயில் பாதுகாப்பு அம்சங்கள் மோசமாக உள்ளன. விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் வேலை வாய்ப்பிற்கான திட்டங்கள் எதுவுமில்லை.
 
அமித்ஷா : இது ஏழைகள் மற்றும் பெண்களுக்கு ஆதரவான பட்ஜெட். 2014ம் ஆண்டு, அரசியலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவோம் என பிரதமர் கூறியிருந்தார். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
உத்தவ் தாக்கரே : சென்ற வருடம் வெளியிட்ட பட்ஜெட்டின் அறிவிப்புகளே இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதில், இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய என்ன அவசியம் இருக்கிறது?
 
தமிழிசை சவுந்தரராஜன் : செக் மூலம் மட்டுமே, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடி வழங்க வேண்டும் என தெரிவித்து, அரசியல் கட்சிகளுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.
 
கனிமொழி : தமிழகத்தை முன்னேற்றும் வகையில் எந்த திட்டமும் அறிவிக்கப்படாதாது ஏமாற்றம் அளிக்கிறது.
 
டாக்டர் ராமதாஸ் : வரிச் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.. வருமானவரி, சமூகத் திட்டங்கள் ஏமாற்றம்! 

வெப்துனியாவைப் படிக்கவும்