துரத்தி வந்த லஞ்ச ஒழிப்புத்துறை; சட்டையை கழட்டி போட்டு ஓடிய போலீஸ்!

வெள்ளி, 5 நவம்பர் 2021 (10:49 IST)
பெங்களூரில் லஞ்சம் வாங்கியதற்காக துரத்தி வந்த அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க போலீஸ் ஒருவர் சட்டையை கழற்றி எறிந்து ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துமகூரு மாவட்டம் சி.எஸ்.புரா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சோமசேகர். இவர் கடந்த மாதம் போக்குவரத்து விதிகளை மீறியதாக சந்திரண்ணா என்பவரது காரை பறிமுதல் செய்துள்ளார்.

அதை விடுவிக்கும்படி சந்திரண்ணா கேட்டதற்கு சோமசேகர் 28 ஆயிரம் கொடுத்தால் காரை விடுவிப்பதாக கூறியுள்ளார். பின்னர் பேசி 12 ஆயிரத்திற்கு சோமசேகரை ஒப்புக்கொள்ள செய்துள்ளார் சந்திரண்ணா. பணத்தை ஏட்டு ரியாஸ் மூலமாக பெற சோமசேகர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் ஏட்டு ரியாஸிடம் பணத்தை கொடுக்கும் முன்பாக சந்திரண்ணா லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சந்திரண்ணாவை பிந்தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு துறை ரியாஸை கைது செய்துள்ளது. இந்த விவகாரம் தெரிந்த உதவி ஆய்வாளர் சோமசேகர் தனது சீருடைய கழற்றி கால்வாயில் எறிந்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். அவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் துரத்தி பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்