தேசிய கீதம் பாடியதும் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! வைரலான வீடியோ!

வெள்ளி, 20 டிசம்பர் 2019 (18:26 IST)
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களை போலீஸார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தி வரும் நிலையில் தேசிய கீதம் பாடி கூட்டத்தை கலைய செய்த போலீஸ் ஒருவரின் வீடியொ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சில இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்ததால் நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

டெல்லி ஜாமியா மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் பல கல்லூரி, பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெங்களூர் வொயிட் ஹால் பகுதியில் போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்களிடம் காவலர் ஒருவர் தன்மையோடு பேசுவதும், பிறகு தேசிய கீதம் பாடிய பின்னர் கூட்டம் அமைதியாக கலைந்து செல்வதுமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பல்வேறு இடங்களில் போலீஸார் கண்ணீர் புகை குண்டு, தடியடி நடத்தி வரும் நிலையில் அமைதியான முறையில் பேசி மக்களை கலைந்து போக அறிவுறுத்திய காவலருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

#WATCH Karnataka: DCP of Bengaluru(Central),Chetan Singh Rathore sings national anthem along with protesters present at the Town Hall in Bengaluru, when they were refusing to vacate the place. Protesters left peacefully after the national anthem was sung. #CitizenshipAmendmentAct pic.twitter.com/DLYsOw3UTP

— ANI (@ANI) December 19, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்