வாகன சோதனை: பணம் கேட்டு மிரட்டி சுட்டு கொலை: போலீஸ் அராஜகம்

சனி, 29 செப்டம்பர் 2018 (18:29 IST)
போலீஸாரின் அதிகாரத்திற்கு எல்லை இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் வாகன் சோதனையில் ஈடுப்பட்ட போது சாப்ட்வேர் நிர்வாகி ஒருவரை சுட்டு கொன்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை விவேக் திவாரி தனது நண்பருடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
 
அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போலீஸார் காரை மறித்தனர். ஆனால் வேகமாக வந்த கார் நிற்காமல் செல்ல,  சந்தேகமடைந்த போலீஸார் விவேக் திவாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 
 
இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
ஆனால், விவேக் திவாரியுடன் காரில் சென்றவர்கள், போலீஸார் எங்களை தடுத்து நிறுத்தி பணம் பறிக்க முயன்றனர். பயந்துபோனதால் நாங்கள் அந்த இடத்தை விட்டு செல்ல முற்பட்டோம். ஆனால் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். எதும் கூறாமல் விவேக்கை சுட்டுக் கொன்றனர் என தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்