பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட கடுமையான குறைபாடு குறித்து தமது கவலையை அப்போது குடியரசு தலைவர் தெரிவித்ததாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவரை சந்தித்தது குறித்து நரேந்திர மோதியும் தமது பக்கத்தில் பகிர்ந்து, அவர் வெளிப்படுத்திய கவலையும் வாழ்த்தும் எப்போதும் தாம் வலிமையுடன் திகழ ஆதாரமாக இருந்துள்ளன என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறையால், பிரதமர் மோதி தனது பயணத்தை நேற்று ரத்து செய்தார். இந்த விவகாரத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால், பஞ்சாப் பயணத்தை பிரதமர் மோதி நேற்று ரத்து செய்தார். இது குறித்து மாநில அரசிடம் மத்திய உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநில அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணக்குழுவை அமைத்துள்ளது.