போர் கப்பலில் பயணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

வெள்ளி, 13 ஜூன் 2014 (18:22 IST)
இந்தியாவின் இரண்டாவது பெரிய விமானம் தாங்கி போர் கப்பலான INS விக்ரமாதித்யா போர் கப்பல் கடற்படையில் நாளை சேர்க்கப்படுகிறது.
 
கோவாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அப்போது அவர் இந்தக் கப்பலில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
 
ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இந்த போர் கப்பல், 15,000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையது, 44,500 டன் எடை கொண்டது. இதன் நீளம் 284 மீட்டர் ஆகும். அதி நவீன வசதிகளைக் கொண்ட இந்த கப்பலில் பல நவீன போர் விமானங்கள் உள்ளன.
 
இந்த நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி கோவா துறைமுகத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட உள்ளார்.
 
அதை தொடர்ந்து, அந்த போர் கப்பலில் பயணம் செய்கிறார். பயணம் செய்து கொண்டே கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். பின்னர் கடற்கரை சார்ந்த பயிற்சி பொருட்களின் மையத்தை அங்கு அவர் திறந்து வைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்