அம்பேத்கருக்கு பஞ்சதீர்த்தம், படேலுக்கு சிலை! வரலாறு முக்கியம்! – பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (17:35 IST)
இந்தியாவில் உண்மையான போராட்ட வீரர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாகவும் அதை சரிசெய்து வருவதாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் சுகல்தேவ் மகாராஜா நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வரலாற்றில் மறக்கப்பட்ட நாயகர்களையும், நாயகிகளையும் நினைவு கூர வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியாவில் வரலாறு பிரிட்டிஷ் ஆதரவு மனநிலையோடே அதிகமாக எழுதப்பட்டுள்ளன. உண்மையான சுதந்திர வீரர்களின் வரலாற்றை மக்கள் கலைகள் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்” என பேசியுள்ளார்.

மேலும் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸை நினைவுக்கூறும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நினைவு சின்னங்கள், படேலுக்கு அமைக்கப்பட்ட சிலை, அம்பேத்கருக்கு இந்தியா முதல் லண்டன் வரை உள்ள பஞ்சதீர்த்தங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி வரலாற்று பிழைகளை சரிசெய்து வருவதாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்