வென்டிலேட்டர்கள் தயாரிக்க ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு: பிரதமர் அலுவலகம் தகவல்

செவ்வாய், 23 ஜூன் 2020 (12:01 IST)
வென்டிலேட்டர்கள் தயாரிக்க ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும், தினமும் 10 ஆயிரத்துக்கும் மேலான கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்ந்துள்ளது என்பதும், கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இதற்காக கோடிக்கணக்கான பணம் ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக பி.எம்.கேர்ஸ் மூலம் வெண்டிலேட்டர்கள் தயாரிக்க ரூபாய் 2000 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்தியாவிலேயே 50,000 வெண்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்ட உள்ளதாகவும் இதற்காகத்தான் ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் வென்டிலேட்டர் பற்றாக்குறை நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அதுமட்டுமின்றி புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ரூபாய் 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்