இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோனிகாவை அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து கோவா டி.ஐ.ஜி கூறியதாவது, "ராஜ்குமார் சிங் மோனிகாவிடம் அதிக பணம் கேட்டு மிரட்டி உள்ளார். மோனிகா பர்சில் 4 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது, ராஜ்குமாருக்கு அது போதவில்லை எனவே மோனிகாவின் ஏடிஎம் கார்டை எடுத்து பாஸ்வேர்டை மிரட்டி வாங்கி உள்ளார்.
பின்னர் ஆபாச வீடியோக்களை காட்டி மோனிகாவை வலுகட்டாயமாக பார்க்க வைத்துள்ளார். பின்னர் ராஜ்குமார் சிங் மோனிகா சிங்கை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளார். ராஜ்குமாருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிவிட்டோம். தடய அறிவியலுக்கும், டிஎன்ஏ பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது." என்றார்.