கால்மிதி, உள்ளாடையில எல்லாம் சாமி படம் போடுவிங்களா? - ட்ரெண்டான #BoycottAmazon

செவ்வாய், 10 நவம்பர் 2020 (13:13 IST)
தீபாவளி பண்டிகையையொட்டி அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் விழாக்கால விற்பனை நடத்தி வரும் நிலையில் இந்து மத கடவுள்களை இழிவுப்படுத்தும்படி அமேசான் செயல்படுவதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ளது அமேசான். தற்போது தீபாவளி நெருங்கும் நிலையில் விழாக்கால விற்பனையை தொடங்கியுள்ள அமேசான் பல்வேறு பொருட்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் அமேசான் தளத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கால் மிதிக்கும் கார்ப்பெட் மற்றும் உள்ளாடைகளில் இந்து மத கடவுளின் படங்கள், முத்திரைகளை அச்சிட்டு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த பொருட்கள் வெளிநாடுகளில் விற்கப்பட்டாலும் இந்து மத உணர்வுகளை இழிவுப்படுத்தும் விதமாக பொருட்களை விற்கும் அமேசானை புறக்கணிக்க வேண்டும் என பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து இணையத்தில் #BoycottAmazon என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்