சிறப்பு ரயில் வந்திருப்பதாக வதந்தி – மும்பையில் கூடிய கூட்டம்

புதன், 15 ஏப்ரல் 2020 (09:32 IST)
நேற்று முதற்கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் சிறப்பு ரயில் வந்திருப்பதாக வெளியான வதந்தியால் மும்பையில் மக்கள் குவிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரங்கு அமலில் உள்ளது. நேற்றுடன் ஊரடங்கு முடிந்த நிலையில் நேற்று மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கை இரண்டாம் கட்டமாக மே 3 வரை நீட்டித்துள்ளார்.

ஊரடங்கால் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அன்றாட தேவைகளுக்கும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஊரடங்கு முடிவதாக இருந்த சூழலில் மும்பை பந்த்ரா ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் வந்திருப்பதாக யாரோ வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இதை நம்பி பல மாநிலங்களில் இருந்து மும்பையில் உள்ள மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பந்த்ரா ரயில் நிலையத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அந்த மக்களை தடியடி நடத்தி விரட்டினர் போலீஸார். பிறகு வதந்தி பரப்பியது யார் என்பது குறித்து சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மும்பையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்