ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தடை கோரியுள்ளது. அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் ’ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு ‘ இது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது என்று கூறி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமென மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இதற்கிடையே இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் வீட்டு முன், நேற்று, சுமார் 20 பேர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களை போலீஸார் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.