காதல் கடிதம் கொடுத்ததால் அபராதம்...நீதிமன்றம் அதிரடி
புதன், 11 ஆகஸ்ட் 2021 (16:59 IST)
திருமணமான பெண் ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்த நபருகு அபராதம் விதித்துப் மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் கிளைஅதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த உலகில் காதலை வெளிப்படுத்த காதல் கடிதம் கொடுப்பது நாகரீகமான செயல் என சினிமாக்களில் வசனங்கள் வந்தாலும் திருமணமான பெண்களுக்கு காதல் கடிதம் கொடுப்பது அநாகரீகம் ஆகும்.
இந்நிலையில், மும்மையில் மணமான பெண் ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்தவருக்கு மும்பை ஹைக்கோர்ட் நாக்பூர் கிளை ஒரு அதிரடி தீர்ப்பு வழங்கி அந்த நபருக்கு ரூ.9000 அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் கூறீயுள்ள தீர்ப்பி, திருமணமான பெண்ணுக்குக் காதல் கடிதம் கொடுப்பது அப்பெண்ணை அவமானப் படுத்துவது போலாகும், மேலும், அந்த நபர் அப்பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்ததுடன் ஆபாச செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.