வர்த்தக விசாவில் சென்று மதப்பிரசாரம்: இலங்கையில் பால் தினகரன் பாஸ்போர்ட் பறிமுதல்

ஞாயிறு, 26 மார்ச் 2023 (11:29 IST)
வர்த்தக விசாவில் இலங்கை சென்ற பால் தினகரன் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அவருடைய பாஸ்போர்ட் பறிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இயேசு அழைக்கிறார் என்று அமைப்பைச் சார்ந்த பால் தினகரன் கடந்த வாரம் வர்த்தக விசாவில் இலங்கை சென்றார். அங்கு அவர் மதக்கூட்டத்தில் கலந்து கொண்டு துண்டு பிரசுரன்ங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது 
 
இதனை இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஈடுபட்டதாக அவருடைய பாஸ்போர்ட்டை இலங்கை அரசு பறித்து உள்ளது. மேலும் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.
 
இதனைஅடுத்து  மதப் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்