நடுவானில் விமான அவசர கதவை திறக்க முயன்ற நபரால் பீதியான சக பயணிகள்

செவ்வாய், 11 ஜூலை 2017 (18:31 IST)
பறக்கும் விமானத்தில் பயணி ஒருவர் அவசர வழிக்கான கதவை திறக்க முயன்ற சம்பவம் சக பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.


 

 
நேற்று டெல்லியில் இருந்து ராஞ்சி நோக்கி ஏர் ஏசியா விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் தரை இறங்குவதற்கு சற்று முன் பயணி ஒருவர் திடீரென அவசர கதவை திறக்க முயற்சித்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகள் பதற்றம் அடைந்து அவரை தடுக்க முயற்சித்துள்ளனர். 
 
ஆனால் அவர் தடுக்க முயற்சித்தவர்களை தாக்கியுள்ளார். ஆனால் அவரால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் பயணிகளிடையே சற்று பதற்றம் குறைந்தது. இதையடுத்து விமானம் தரை இறங்கியவுடன் அவரை அதிகாரிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

வெப்துனியாவைப் படிக்கவும்