ரயிலில் பரிமாறப்பட்ட சூப்பில் கரப்பான் பூச்சி

புதன், 17 செப்டம்பர் 2014 (13:25 IST)
மதுராவில் இருந்து புனேவிற்கு ரயிலில் பயணம் செய்த பெண் பயணிக்கு பரிமாறப்பட்ட தக்காளி சூப்பில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி இருந்தது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
நிஜாமுதீன்-வாஸ்கோ கோவா ரயில் மூலம் வீணா நாயக் என்னும் பெண் அவரது கணவரோடு பயணித்துக்கொண்டிருந்தார். 
 
அப்போது மன்மட் நிலையத்தை ரயில் நெருங்கிய போது, தக்காளி சூப் வாங்கிய வீணா, அதில் ஏதோ மிதப்பதை கண்டார். முதலில் அதனை வெங்காயம் என நினைத்த அவர் சரியாக பார்த்தபோதுதான் அது  கரப்பான் பூச்சி எனத் தெரியவந்துள்ளது. 
 
இதனையடுத்து, கேண்டீன் ஊழியர்களிடம் புகார் அளித்தபோது, அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர் வீணா சுகாதாரமற்ற உணவு குறித்து ரயிலின் கண்காணிப்பாளர் சஞ்செய் தேஷ்பாண்டேவிடம் புகார் அளித்தார். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்