தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைப்பு

திங்கள், 20 மார்ச் 2023 (15:47 IST)
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் அமளிஏற்பட்டதன் காரணமாக நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் இரு அவைகளிலும் ராகுல் காந்தி மற்றும் அதானி விவகாரம் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருவதால் அமளி துமளி நடந்து வருகிறது என்பதும் இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. 
 
கடந்த வாரம் முழுவதும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எந்தவிதமான மசோதாவும் இயற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்றும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 

உறுப்பினர்களின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பின்னர் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அதானி நிறுவன விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டு வருகின்றனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்