தனக்கு வாக்களிக்காதவரின் வீட்டை இடிக்க முயற்சித்த பஞ்சாயத்து உறுப்பினர்

திங்கள், 4 ஜூலை 2016 (17:24 IST)
கர்நாடகாவில் நடைப்பெற்ற பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு வாக்களிக்காதவரின் வீட்டை இடிக்க முயற்சித்த பஞ்சாயத்து உறுப்பினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
பெங்களூர் தேவனஹள்ளி அருகே சொன்னஹள்ளி கிராமத்தில் ரேனுகேஸ்வரா என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் அவர் புதிதாக கட்டும் வீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து உறுப்பினர் வெங்கடேஷ் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வீட்டை சூறையாடியதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து ரேனுகேஸ்வரா காவல் துறையில் புகார் அளித்து, காவல் துறையினர் வெங்கடேசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேலும் ரேனுகேஸ்வரா மற்றும் அவரது மனைவி வெங்கடேசுக்கு வாக்களிக்காததால் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே வெங்கடேஷ், ரேனுகேஸ்வரா வீடு அரசுக்கு சொந்தமான இடம் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த வீடு கட்டப்படும் இடம் ரேனுகேஸ்வராவிற்கு சொந்தமானது என்பதற்கான ஆதராங்களை அவர் சமர்பித்து உள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்