பத்மநாப சாமி கோயில் அலுவலகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர் சஸ்பெண்ட்.. நிர்வாகம் அதிரடி..!

Siva

வியாழன், 11 ஜூலை 2024 (15:09 IST)
கேரளாவில் உள்ள பத்மநாப சாமி கோயிலில் ஊழியர் ஒருவர் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கேரள மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் உலகப் புகழ் பெற்றது என்பதும் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கோவில் அருகே கோவில் கணக்கு வழக்குகளை பார்க்கும் அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில் இந்த அலுவலகத்தில் அதிகாரி ஒருவர் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாக தெரிகிறது.
 
இது குறித்து விசாரணை செய்த கோவில் நிர்வாகம் கோவில் சம்பந்தப்பட்ட எந்த இடத்திலும் அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விதி இருக்கும் நிலையில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்தனர். மேலும் அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆட்சி மன்ற குழு கூடி முடிவு எடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 கோவில் அலுவலகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட அலுவலருக்கு விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்