பீகாரில் இந்தியா கூட்டணியின் வாக்கை பிரிக்கும் ஒவைசி.. 15 தொகுதிகளில் போட்டி..!

Mahendran

சனி, 30 மார்ச் 2024 (08:06 IST)
பீகாரில்  இந்தியா கூட்டணியின் தொகுதி உடன்பாடு குறித்த தகவல் நேற்று வெளியான நிலையில் தற்போது திடீரென ஒவைசி தனது கட்சியை 15 இடங்களில் தனித்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுவதை அடுத்து இந்தியா கூட்டணியின் வாக்குகள் பிரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒவைசியின் கட்சி உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவதாகவும் குறிப்பாக கிழக்கு பீகாரில் உள்ள 13 தொகுதிகளுக்கு இந்த கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது என்றும் அதேபோல் மேலும் இரண்டு தொகுதிகளுக்கு அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

பாஜகவுக்கு எதிரான வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு மொத்தமாக செல்லும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 15 தொகுதிகளில் ஓஐசி வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளதை அடுத்து இந்தியா கூட்டணியின் வாக்குகள் பிரியும் என்று கூறப்படுகிறது
 
ஒரு சில ஆயிரம் வாக்குகளை ஒவைசி கட்சி பிரித்தால் கூட இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்றும் கடந்த 15 வருடங்களாக பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒவைசி இதைத்தான் செய்து வருகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஒவைசி கட்சி போட்டியிடுவதால் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அவரது  கட்சியை பாஜகவின் ’பி’ டீம் என்றும் இந்தியா கூட்டணியினர் கூறி வருகின்றனர்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்