அனைத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் மூட உத்தரவு

வியாழன், 15 ஏப்ரல் 2021 (20:44 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
 

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்

எனவே இத்தொற்றிலிருந்து மக்களைப் பாதுவாக்கப் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் , டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் இந்திய தொல்லியல் ஆய்வின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் வரும் மே 15 ஆம் தேதிவரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்