டெல்லியில் ஓபிஎஸ், எடப்பாடி : இரு அணிகளும் இணைவு?

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (11:58 IST)
அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.


 

 
அதிமுக தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக துணைப்பொதுச்செயலாளரக தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும், தினகரனின் அறிவிப்புகள் எதுவும் செல்லாது எனவும், அதிமுகவிற்கு ஜெயலலிதாதான் நிரந்த பொதுச்செயலாளர் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியும் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த தீர்மானம் தினகரன் தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  
 
சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கினால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கையை முதல்வர் எடப்பாடி அணி ஏறக்குறைய நிறைவேற்றியுள்ளது.
 
எனவே இரு அணிகளும் மீண்டும் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. ஓ.பி.எஸ்-ற்கு அவர் விரும்பும் ஒரு துறையும், அதேபோல், சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை விஜயபாஸ்கரிடமிருந்து பறித்து, ஓ.பி.எஸ் ஆதரவு செம்மலைக்கு அளிக்கப்படலாம் எனவும், தொழில்துறை அமைச்சர் பதவி எம்.சி.சம்பத்திடம் இருந்து பறிக்கப்பட்டு, ஓ.பி.எஸ் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜனுக்கு அளிக்க எடப்பாடி அணி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.


 

 
இந்நிலையில்தான், துணை ஜனாதிபதியாக வெங்கயநாயுடு பதவியேற்கும் விழாவிற்கு வருமாறு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோருக்கு டெல்லியிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நேற்று டெல்லி சென்றுள்ளனர். எனவே, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும் எனத் தெரிகிறது.
 
எனவே, இரு அணிகளும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்