கோவாக்சின் மட்டுமே... 15-18 வயதுக்குட்பட்டோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

திங்கள், 3 ஜனவரி 2022 (12:22 IST)
15-18 வயதுக்குட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போட அனுமதி தரப்பட்டுள்ளது என மத்திய அரசு நினைவூட்டல். 

 
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சிறுவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். 
 
அதன்படி பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்தார். மேலும் கோவின் இணையதளத்தில் இதற்கான முன்பதிவுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் இதுவரை 7 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக முன் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 
 
இதனிடையே 15-18 வயதுக்குட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போட அனுமதி தரப்பட்டுள்ளது. எனவே அதை மட்டுமே செலுத்த வேண்டும் என மன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதோடு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் போடலாம் என நினைவூட்டியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்