உள்ளூர் விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி

திங்கள், 5 அக்டோபர் 2015 (04:41 IST)
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த வெங்காய விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து  வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.
 

 
இந்தியாவில் பருவம் தவறி மழை பெய்து வருவதால், பல மாநிலங்களில் வெங்காய உற்பத்தி இல்லாமல் போனது. இதன் காரணமாக, இந்திய சந்தைகளில் வெங்காய விலை மிகவும் உச்சத்திற்கு சென்றது. ஒரு கிலோ வெங்காயம் சுமார் 70 முதல் 80 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
இதனையடுத்து, வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடியாக களத்தில் குதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுமார் 18,000 டன் வெங்காயம் எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு  இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், கடந்த 2014-15 ஆம் ஆண்டில் எகிப்தில் இருந்து 567 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில், சுமார் 35,000 டன்கள் உச்சத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்