வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரி சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், சில்லறை விற்பனையில் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து, விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு சேமிப்பு கிடங்குகளில் கையிருப்பாக உள்ள வெங்காயத்தை சந்தையில் விநியோகம் செய்து, விலை உயர்வை கட்டுப்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சேமிப்பு கிடங்குகளில் உள்ள வெங்காயத்தை டெல்லி உள்பட மாநிலங்களின் தலைநகரங்களில் விநியோகம் செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும், அதுமட்டுமின்றி மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதேபோல், தக்காளி விலையும் உயர்ந்தால், வெங்காயத்தைப் போலவே, மத்திய அரசு அதற்கும் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.