ஒரு தம்ளர் காஃபி, ஒரு தம்ளர் டீ. ரூ 78, 650 .. அதிரவைத்த' ஹோட்டல் பில் '!

வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (16:13 IST)
காமெடி நடிகரான கிகு சர்டா, சமீபத்தில் இந்தோனேஷியா நாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு காஃபி ஷாப்பில், டீ மற்றும் 1 காப்பிச்சினோ காஃபி ரூ. 78 650 என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கபில் ஷர்மா என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கிகு சர்டா என்ற நடிகர் சமீபத்தில் இந்தோனேஷியாவிற்கு சென்று, ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது ஒரு டீ மற்றும் காப்பச்சினோ காஃபியை ஆர்டர் செய்துள்ளார். இவை முறையே டீக்கு- ரூ. 30 ஆயிரம் மற்றும் ஃபாபிக்கு ரூ.35ஆயிரம் என்றும், இதற்கான வரியாக ரூ. 13650 என்று மொத்தமாக ரூ. 78650 என்று குறிப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடையவில்லை. ஹோட்டல் மீது புகார் தெரிவிக்கவுமில்லை. இந்த பில் தொகையை மொத்தமும் கட்டியுள்ளார்.
 
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கிகு சார்டா பதிவிட்டுள்ளதாவது : ஒரு டீ மற்றும் காஃபிக்கு பில் தொகையாக நான் ரூ. 78650 செலுத்தியுள்ளேன். ஆனால் நான் இந்த பில் தொகை குறித்து புகார் தெரிவிக்கவில்லை. இந்தோனேஷியாவில் இந்த தொகையானது, இந்த இந்திய ரூபாய் மதிப்பைவிட ரூ. 400 தான் அதிகம் என்று தன் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவுக்கு நெட்டிசன்கள்  பலரும் விமர்சித்து வருகின்றனர்.

'My bill for 1 cappuccino and 1 tea is 78,650/- ,,,,,,, but I am not complaining as I am in Bali , Indonesia and this amount in their currency converts to 400/- in Indian currency '
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்