ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்': பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார்

வியாழன், 1 டிசம்பர் 2022 (13:11 IST)
பாஜகவினர் கடந்த சில ஆண்டுகளாக ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற கோஷங்களை எழுப்பி வரும் நிலையில் ஒரே நாடு ஒரே மின் கட்டணம் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
நாடு முழுவதும் ஒரே சீரான மின் விகிதம் இருக்க வேண்டும் என்றும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று பேசுபவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்றும் ஆனால் மின் நுகர்வோருக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் இருக்க வேண்டும் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார் 
 
மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு பீகார் மின்சாரம் பெறுகிறது என்றும் அதனால்தான் நாங்கள் அதிக நுகர்வோருக்கு அதிக கட்டணத்தை விதிக்க வேண்டிய நிலை இருக்கிறது என்றும் அதனால் நாடு முழுவதும் ஒரே விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்றால் ஒரே நாடு ஒரே மின் கட்டணம் என்ற கொள்கையை ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்