மத்திய பிரதேச தலைநகர் போபாலில் வசித்து வருபவர் சிராஜ். இவருக்கு ஷேக் ரஸா என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருக்கிறது. குழந்தை தன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர், குழந்தையை கவனிக்காமல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர். சற்றும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த தெரு நாய்க்கள் குழந்தையை கடித்து, 50 அடி துாரம் இழுத்து சென்றன.
இதையடுத்து சற்று நேரம் கழித்து குழந்தையை காணாததால், பெற்றோர்கள் அக்கம் பக்கம் தேடினர். வீட்டினருகே குழந்தை ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.