மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து, புதிய நோட்டுகளை பெற, இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முதியவர் ஒருவர், கையில் தேசியக் கொடியுடன், ஒரு வங்கியின் முன்பு நிர்வாணமாக படுத்து போராட்டம் நடத்தினார்.
ஏற்கனவே, டெல்லியில் திருநங்கை ஒருவர், நீண்ட வரிசையில் நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மேலாடையை கழற்றி வீசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.