ஓலா, உபேர் டிரைவர்கள் Rideஐ கேன்சல் செய்தால் பயணிக்கு நஷ்ட ஈடு: அதிரடி உத்தரவு..!

Siva

வெள்ளி, 2 மே 2025 (10:10 IST)
மஹாராஷ்டிரா மாநில அரசு, ஓலா, உபர், ரேபிடோ போன்ற ஆப் டாக்ஸி சேவைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கொள்கை வெளியிட்டுள்ளது.
 
இந்த கொள்கை, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதீர் குமார் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
 
அண்மைக் காலங்களில், ஆப் டாக்ஸி பயணிகள் பல்வேறு புகார்களை முன்வைத்தனர். அதில் குறிப்பாக டிரைவர்கள் காரணமின்றி பயணங்களை ரத்து செய்தல், மிக அதிகமான “சர்ஜ் பிரைஸிங்” கட்டணம், பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள். இந்த புகார்களால் புதிய கொள்கை வகுக்கபப்ட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
 
நேரடி GPS கண்காணிப்பு மற்றும் அவசர அழைப்பு பட்டன் கட்டாயம்
 
அனைத்து டிரைவர்களுக்கும் காவல் துறை சரிபார்ப்பு கட்டாயம்
 
சர்ஜ் கட்டணம் 1.5 மடங்கு வரை மட்டுமே அனுமதி
 
டிரைவர் பயணத்தை ரத்து செய்தால், பயணிக்கு நஷ்ட ஈடு
 
பழைய  மோசமான வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்
 
மேற்கண்ட விதிமுறைகளை மே 1 முதல் பின்பற்றாவேண்டும். அதேபோல் டிரைவர்களுக்கு நலன் அளிக்கும் வகையில்  நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன:
 
ஒவ்வொரு பயணத்திலிருந்தும் குறைந்தபட்சம் 80% கட்டணம் டிரைவருக்கே செல்ல வேண்டும்
 
 பயிற்சி, காப்பீடு, நலன்சார்ந்த நன்மைகள் வழங்க வேண்டும்
 
மதிப்பீடு குறைவாக இருக்கும் டிரைவர்கள் மீள்பயிற்சி பெற வேண்டும்
 
இந்த புதிய விதிமுறைகளால் பொதுமக்களுக்கு இது ஒரு நம்பிக்கையான பயண அனுபவம் ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்