ஆசிரியைகள் கைத்தறி சேலை உடுத்த வேண்டும்; ஒடிசா அரசு அதிரடி
புதன், 30 மே 2018 (21:22 IST)
ஒடிசா மாநிலத்தில் பள்ளி ஆசிரியைகள் அவசியம் கைத்தறி சேலை உடுத்த வேண்டும் என்று ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநில கைத்தறி துணிகள் மிகவும் புகழ் பெற்றவை. சமீப காலமாக கைத்தறி துணிகள் விற்பனை மிகவும் குறைந்து வருகிறது. இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில் ஒடிசா அரசின் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறை அமைச்சர் சினேகாங்கினி சுனா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒடிசாவில் உள்ள நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியைகள் கட்டாயம் கைத்தறி சேலைகளை உடுத்த வேண்டும்.
கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது.