வட மாநிலங்களில் நிலநடுக்கத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

திங்கள், 27 ஏப்ரல் 2015 (07:49 IST)
இந்தியாவின் வட மாநிலங்களில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.


 

 
சனிக்கிழமை முற்பகல் 11.46 மணியளவில், நேபாளத்தில் மையம் கொண்டு, ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ந்து 3 நிமிடம் நீடித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவதாக பகல் 12.16 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  
 
இந்த நிலநடுக்கத்தால், பீகாரில் 46 பேரும், உத்தர பிரதேசத்தில் 13 பேரும், மேற்கு வங்கத்தில் 2  பேரும், மற்றும் ராஜஸ்தானில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
 
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கான நிவாரணத் தொகையை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை படை  மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்