கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி இருந்த நிலையில் தற்போது உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக இருந்தது என்றும் ஆனால் தற்போது டெல்லி மக்கள் கடுமையாக உழைத்து உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றி உள்ளனர் என்றும் தொடர்ந்து நல்ல நிலையை அடைய நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று டெல்லி முதலமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வடமாநிலங்களில் காற்று மாசு தரக்குறியீடு அளவு, மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடை முடிந்த நிலையில், விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. நொய்டாவில் (உ.பி) 539, குருகிராமில் (ஹரியானா) 478, தீர்பூரில் 534, டெல்லியில் 431 ஆக காற்று மாசு தரக்குறியீடு அளவு உள்ளது.
இதற்கிடையில், காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில் உள்ள பள்ளிகள் தங்கள் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. நொய்டாவில் உள்ள பள்ளிகள் நவம்பர் 3 முதல் 8 வரை மூடப்படும் மற்றும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.