இந்தியாவிலுள்ள குடிமக்களுக்கு இந்த சட்டத்தால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும், வங்கதேசம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு மட்டுமே இந்த குடியுரிமை சட்டம் பொருந்தும் என்று பாஜகவினர் விளக்கம் அளித்து வருகின்றனர்
இந்த நிலையில் வங்கியில் கணக்கு தொடங்க குடியுரிமை சான்றிதழ் அவசியம் என்றும் மத அடையாளம் குறித்த சான்றிதழ் தேவை என்று ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிதித்துறை செயலாளர் ராஜீவ்குமார் அவர்கள் ’வங்கி கணக்கு தொடங்கும் போது இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களும் தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும், அதேபோல் மத அடையாளம் குறித்த விவரம் விண்ணப்பத்தில் இருந்தாலும் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்