ஆம்புலன்சை முந்தி சென்றால் ஓட்டுனர் உரிமம் ரத்து : சித்தராமையா எச்சரிக்கை

வியாழன், 8 அக்டோபர் 2015 (19:29 IST)
ஆம்புலன்சை முந்தி சென்றால் ஒட்டுநர் உரிமர் ரத்து செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.


 

 
பெங்களூரில், புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை கொடியசைத்து தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசியபோது, 
 
"பெங்களூரு போன்ற மாநகரங்களில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. இங்கு அவசர சேவையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கும் போது அதற்கு வழிவிடவும் சிலர் மறுக்கின்றனர்.
 
மேலும், சிலர் ஆம்புலன்ஸ் வாகனங்களை முந்தி செல்லவும் முயற்சிக்கின்றனர். வாகனங்களில் செல்வோர் ஆம்புலன்ஸ முந்தி செல்ல முயற்சித்தால் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.மாநிலத்தில் எல்லோருக்கும், எங்கெங்கும் சுகாதாரம் என்ற திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். சுகாதார கவசம் திட்டத்தில் 517 ஆம்புலன்ஸ் இடம் பெற்றிருந்தன.
 
காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற அந்தத் திட்டத்துக்கு கூடுதல் வாகனங்கள் வாங்கப்பட்டன. விபத்தில் காயமடைந்தவர்கள், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று பேசினார்

வெப்துனியாவைப் படிக்கவும்