கோ கொரோனா போய் நோ கொரோனா... உருமாறிய கொரோனாவுக்கு புது கோஷம்!

திங்கள், 28 டிசம்பர் 2020 (13:38 IST)
நோ கொரோனா, நோ கொரோனா புதிய கோஷத்தை இறக்கிவிட்ட மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.

 
கொரோனா இந்தியாவில் பரவ ஆரம்பித்த சமயத்தில் கொரோனாவை ஒழிக்க கோ கொரோனா கோ என்று கோஷமிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தற்போது புதிய கோஷத்தை அறிமுகம் செய்துள்ளார். 
 
ஆம், அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் முன்பு கோ கொரோனா, கொரோனா கோ என்றேன். தற்போது கொரோனா நோய் தாக்கம் குறைகிறது. தற்போது புதிய வடிவம் கொண்ட கொரோனா பரவி வருகிறது. இப்போது நான் நோ கொரோனா நோ கொரோனா என்கிறேன். கொரோனா இன்னும் சில நாட்களில் சென்றுவிடும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்