வயதானவர்களுக்கு டோர் டெலிவரி மருத்துவம்: பீகார் முதல்வரின் புதுமை திட்டம்

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (06:10 IST)
வயதானவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களை மருத்துமனைகளுக்கு கொண்டு செல்வதே ஒரு பெரிய சிரமமாக இருக்கும். அப்படியே சென்றாலும் மருத்துவமனையின் சூழல் வயதானவர்களுக்கு ஒத்து கொள்வதில்லை


 
 
இதனை கருத்தில் கொண்டு வயதானவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் மொபைல் தெரபி திட்டத்தை நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார். இதற்காக உலக வங்கியும் நிதி உதவி அளித்துள்ளது. இந்த மொபைல் தெரபி வேனில் அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் எந்த நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள்
 
முதல்கட்டமாக இந்த வசதி பீகாரில் உள்ள பாட்னா, நாளந்தா, பகல்பூர், பெகுசராய், பக்சர், முசாபர்பூர், நவாடா, புர்னியா, ரோத்தஸ், தர்பங்கா மற்றும் சமஸ்திப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செயல்படுத்தப்படுவதாகவும், விரைவில் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவக்கப்படும் என்றும் துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி மற்றும் சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மா ஆகியோர் கூறியுள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்