பீகார் மாநிலத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இங்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய போது லாலு பிரசாத் யாதவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிலர் தனக்கும் தனக்கு தங்களது குடும்பத்திற்கு அனைத்தும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், தனது பதவி பறிபோனால் கூட மனைவியை அதில் உட்கார வைத்து விடுகிறார்கள், குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களையும் எம்எல்ஏ, எம் பி ஆக்கி விடுகிறார்கள் ஒரு குடும்பத்திற்கு இத்தனை குழந்தைகள் அவசியமா? குடும்பத்தையும் வளர்த்து குடும்ப அரசியலையும் வளர்க்கின்றனர் என்று லாலு பிரசாத் யாதவை மறைமுகமாக நிதிஷ்குமார் விமர்சனம் செய்தார்.
அவரது விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் அவர்கள் தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்பத்தை விமர்சனம் செய்வதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, எங்கள் குடும்பத்தை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, வேலையில் திண்டாட்டம், ஏழ்மை, வளர்ச்சி, விலைவாசி உயர்வு குறித்து பேசலாம் என்று தெரிவித்தார்.