உலகளவில் 60 சதவீத தடுப்பூசிகளை வினியோகிப்பது இந்தியா தான்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (07:53 IST)
உலக அளவில் 60% தடுப்பூசிகளை வினியோகிப்பது இந்தியா தான் என்று பெருமையுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக அளவில் பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளில் 60 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும், அவை பல உலக நாடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது என்றும் உலக அளவில் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்தியா ஒவ்வொருவருக்கும் இரண்டு தடுப்பு ஊசி செலுத்தி வருகிறது என்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா மிகச்சிறப்பாக நிலைமையை கையாண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கொரோனா காலத்தில் கூட தடுப்பு ஊசிகளை இந்தியா உற்பத்தி செய்தது என்றும் உலக அளவில் நமது பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருப்பதால் இந்தியா பெருமைக்குரிய நாடாக கருதுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்