நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர்களிடம் விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்

செவ்வாய், 24 மார்ச் 2015 (18:41 IST)
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்வி மாணவியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளின் வழக்குரைஞர்கள், பெண்கள் குறித்து அவதூறான கருத்தை கூறியிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
 
இங்கிலாந்தை சேர்ந்த பெண் இயக்குநர் ஒருவர் இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படம் ஒன்றை எடுத்தார். அதில் பெண்கள் குறித்து வழக்குரைஞர்கள் எம்.எல். ஷர்மா மற்றும் ஏ.கே. சிங் அவதூறான கருத்துக்களை கூறியிருந்தனர்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்ற மகளிர் வழக்குரைஞர் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரு வழக்குரைஞர்களும் தங்களது கருத்துக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்